மெல்லிய இசைத்துண்டு ஒன்று புல்லாங்குழலிருந்து வந்து விழுந்தது. அதை நிலவின் ஒளியில் ஊற வைக்க மதுவின்வாசனை கிளம்பியது. அல்லெல்லாம் நிலவின் குளிரில் நனைந்த இசைத்துண்டு தேன் துளியாய் மாற காடே பூத்தது அதிகாலையில். இசைப் பூக்கள் என்று கருதப் பட்ட அவையே சூரியனின் வெம்மையில் எழுத்துக்களாய் மாறியிருந்தன. தனக்கான லிபியை எடுத்துவந்து போட்ட குயிலின் பாடல் எனது வரிகளைக் கொண்டிருந்தது.
Leave a Reply