பெண்மொழியும் காவலும்

இலக்கியப் பிரதிகளை உருவாக்குபவர்கள் கடவுள்கள் அல்ல தவறுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான காரணங்களை அடுக்குவதற்கும். தமிழிலக்கியப் பிரதிகளை கவனத்தில் கொள்வோமெனில் இன்னும் மானுடம் மனம் திறந்து பேசக்கூடிய எத்தனையோ செய்திகள அப்படியே இருக்கின்றன. தலித் பிரச்சினைகளை பிரதிகளாக்கிய காலங்களிலும் அது தீவிர உச்சகட்டத்தை அடைந்த நேரத்திலும் தற்போது அது தேவையற்றதென கருதப் படும் காலத்திலும் இன்னும் காத்திரமாக பேசப்பட வேண்டியவை அப்படியேதான் இருக்கின்றன. கதைகளாக்கப் பட வேண்டிய தலித் வாழ்வுகளும் அதன் எதிர்பாராத தீவிரமும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. [...]

புத்தகக் கண்காட்சி : புத்தாக்கம் செய்யும் தளம்

எப்படியாவது கடைசி( 10/01/10) நாளன்றாவது புத்தகக் கண்காட்சியைப் பார்த்து விடவேண்டும் என்று மனது துடித்தது. கடந்த வாரம்(03/01/10) ஞாயிறன்றே புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதாகத்தான் திட்டம். ஆம்பூரிலிருந்தே இமைகள் தோழர்கள் விஜயராஜனும் ஞானவேலும் ஆம்பூரின் அழகிய தமிழ்மகன் தேவாவும் நானும் செல்வதாகத்தான் திட்டமிட்டோம். இவர்களுடன் செல்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். என்னவென்றால் இலக்கியம் குறித்தும் சினிமா குறித்தும் பேசிக்கொண்டே போகலாம். சாப்பாடி பிரச்சினை இருக்காது. வீட்டிலிருந்தே சாப்பாடு கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். கண்டிப்பாக அதில் புளி சோறு இருக்கும் [...]

திசநாயகா

தீர்மானமானதாக இருக்கின்றது எல்லாம் உண்மையின் மெய்பிம்பங்களை மறைக்கும் மாயபிம்பங்களின் தோற்றங்கள் உட்பட யாருக்கும் தெரியாமல் கொல்லும் தந்திரமும் எல்லாவற்றையும் சூறையாடும் குற்றங்களும் வெளிச்சத்திற்கு வருதல் சாத்தியமாகும் உண்மையின் சொரூபத்தைத் தோலுரித்து ஒரு பழத்தைப் போல தருதல் அதிகாரத்தின் தொண்டையில் முள் ஏற்றுதல் கத்தும் அதன் வலிமையில் ஒரு வதை என்பதோ ஒரு வலி என்பதோ ஒரு கைது என்பதோ ஓர் உயிர் என்பதோ நீதியின் அழிவு என்பதோ எதுவுமற்று முன்பே தீர்த்த தீர்ப்பின் கொழுந்துகளில் எரியும் இருபது [...]

டேவிட்.டி.பக்: படைப்பின் மீதான காதலன்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்பது குறள். குறள் குறித்த பெருமிதம் என்பது வேறு தமிழர்கள் அதைப் படிப்பது அல்லது பின்பற்றுவது என்பது வேறு. ஆனால் இங்கே கூறப்பட்ட குறளின் வரி மிகவும் சிறப்பானது. அன்பை யாராலும் அடைக்கமுடியாது அதற்கான தாழ்ப்பாள்களை இதுவரை யாரும் உருவாக்கவில்லை. அப்படிப்பட்ட அன்பின் இருப்பிடமாகத்தான் வந்தார் திரு. டேவிட்.டி.பக் அவர்கள். டேவிட் அமெரிக்காவின் கெண்டிகா பகுதியைச் சார்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியாவில் ஒருகாலத்தில் தமிழகத்தில் வசித்து வந்ததால் தமிழோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. [...]

நீக்கப் படாத அவை குறிப்புகளும் ஆதவனின் குறைந்த ஒளியும்

மதுரையில் நடந்த கடவு கூட்டத்தில் தமிழ்நதிக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்கும் நடந்த உரையாடலை வாசித்து முடித்தபின் மிகவும் அயர்ச்சி அடைந்தேன். ஆதவனின் பேச்சும் அவரின் பதில் கடிதமும் அவரின் மதிப்பை (இதற்கு கூட ஆதவனால் பகடியாக ஏதாவது கூறமுடியும். எ.கா. உம் மதிப்பு ஒண்ணும் மசுர வளர்க்காது) வெகுவாக குறைக்கிறது என்றே சொல்லவேண்டும். உத்தபுர சுவர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த செயல்பாடுகளை எழுத்தில் வடித்து தமிழகத்தில் சாதி ஒழிக்க வந்த ஒரே இயக்கம் அதுதான் என்பதற்காக தலித் [...]

வலித்தல்

அயர்ந்து தொங்கும் கிளையின் மீதொரு கூடு. வானை தன்னுள் வைத்து பாதுகாக்கிறது. கிளையின் நெய்தலில் கையாளப்பட்ட நுட்பம் கலைக்க காற்று மிகைகிறது. அடிமானத்தின் பள்ளத்தில் நீர் சேரசேர அது தனக்கானதை உறிஞ்சி கொடுக்கின்றது. மேகங்கள் வளரும் இடம் இப்போது கூடு. கூட்டைப் பற்றி கவலைப்படும் நீங்கள் கண்டிப்பாக அடுத்த கோடையில் வரும் மழையை தரிசிக்கலாம்

யாழன் ஆதி கவிதைகள்

1 மௌனத்தின் கூர்மையை அறியாத உன் எத்தனிப்பு படபடக்கும் ஒரு பட்டத்தைப் போன்றது காற்றின் கைகள் கிழிக்கலாம் அதை. 2. வெவ்வேறாய் காய்ந்த குளங்களில் ஒன்றாய் குவிகிறது சூரிய ஒளி. 3. இரவின் குளிரை ஒப்படைத்துவிட்டு செல்கிறேன் என் கவிதைக்கான எழுத்துக்களை நட்சத்திரங்களிலிருந்து பெறுகிறாய் நீ இருப்பினும் சந்திப் பிழைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள் வாசகர்கள் 4. எத்தனை வடிவங்களில் திசை மாறுகிறது வாழ்க்கை நீ கொண்டுவந்த தண்ணீரைப் போலவே. 5. உனக்குத் தெரியாத எனக்கும் எனக்குத் தெரிந்த [...]

அ.முத்துகிருஷ்ணன் வருகை

எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் ஆம்பூர் வந்திருந்தார். வீட்டிலிருந்து புறப்பட்டு பதினெட்டு நாட்கள் ஆகியிருந்தன அவருக்கு. புதுடில்லிக்குப் போய் அங்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் கலந்துக்கொண்டுவிட்டு திரும்பும் வழியில் நாக்பூர் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து பிறகு சென்னை வந்திருக்கிறார். சென்னையில் இருந்து என்னோடு கைப்பேசியில் தொடர்புக்கொண்டு ஆம்பூர் வருவதாக சொன்னவுடன் மகிழ்ச்சியாக இருந்த்து. அவர் வருவதாக சொன்ன அந்த நாளில் தான் ராணிப்பேட்டையில் பிரளயனுடைய  பாரியின் படுகளம் நாடகம் நட்த்தப்படுவதாக அந்த நிகழ்ச்சியை நடத்தும் [...]

கூத்தும் கூத்து சார்ந்த கொடுமையும்

ஒரு வழியாக முடிந்தது போலிருக்கின்றது தொகுதி உடன்பாடுகள். திமுக அணியும் அதிமுக அணியும் முடிவுற்ற சூழல் நிலவுகிறது. வழக்கம் போல தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் சண்டைவிடும் வேலையை இரு கழகங்களும் செய்து முடித்திருக்கின்றன. அணி மாறி போட்டியிட மாட்டோம் என்று முழுமையாக ராமதாஸை நம்பிய திருமா தொகுதி மாறிக்கூட போட்டியிடாத ராமதாஸின் தமிழ் தேசிய உணர்வினை இன்னும் நம்புவார் என்று நினைக்க முடியவில்லை. ஈழத்தமிழர் பிரச்சினையினை தேர்தல் பிரச்சினையாக வைக்க இனி ஜெயலலிதாவை தவிர யாரும் இல்லை என்னும் [...]

சிலம்பு

ஏதோ நடிகர் சிலம்பரசனைப் பற்றி என்று கருத வேண்டாம். அய்ம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் குறித்து பேசவேண்டி இருக்கிறது. ஏனென்றால் அது எழுதப்பட்ட காலத்தில் அப்படி ஒரு காப்பியம் உலகில் வேறு எந்த மொழியிலேயும் எழுதப்படவில்லை. இலியட் போன்ற காப்பியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவை மன்னர்களைப் பற்றியும் போரை முன்வைத்தும் இருக்கும். ஆனால் சாதாரண ஒரு குடும்பத்தலைவனையும் தலைவியையும் கதைத்தலைமையாக வைத்து எழுதப்பட்ட காப்பியம். தமிழ் மக்களின் பண்டைய பண்பாடு கலைகளில் அவர்களின் ஈடுபாடு ஆகியவற்றை நம்மால் நன்கு உணரமுடியும். நான் அதைபற்றி இங்கே கதைக்க வரவில்லை. சிலம்பு எழுதப்படுவதற்கு மூன்று [...]

Follow

Get every new post delivered to your Inbox.